search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பாடி ராயுடு"

    ஐபிஎல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. #IPL2018

    நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்களின் ஏலத்தின் போது வயது அதிகமான வீரர்களை சென்னை எடுக்கும் போது சென்னை சீனியர் கிங்ஸ் என பலரும் கிண்டல் செய்ய, விமர்சனங்களை உடைத்து தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    குவாலிபயர், பைனல், 2 லீக் போட்டிகள் என 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி சென்னையிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிசொதப்பியது, ஆரம்பத்தில் தொடர்ந்து தோற்று பின்னர் அனைவரும் வியக்கும் வண்ணம் சில வெற்றிகளை பெற்று மீண்டும் முக்கியமான போட்டிகளில் தோல்வி என ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றியது என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்தது.

    இளம் வீரர்களின் செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை ஹன்சா ரிசர்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.



    குறைந்தது 1 போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் அடித்த ரன், அரைச்சதம், சதம், விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கின் படி நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருப்பதால் அவர்கள் பட்டியலில் பின் தங்குகின்றனர்.

    ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த சீசனில் அவர் நான்கு அரைச்சதங்களுடன் 530 ரன்களை அடித்தார். அவர் பிடித்த கேட்ச் ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் 2225 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர், நேரடியாக ஏலம் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த சீசனில் அவர் ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாயை அணி செலவளித்துள்ளது.

    இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்ற புள்ளிகள் 2450. அவர் இந்த சீசனில் சம்பளமாக பெற்ற தொகை ரூ.15 கோடி. எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224 ஆயிரம் ரூபாயை அணி அவருக்காக செலவளித்துள்ளது.

    சென்னை அணியின் மற்றொரு வீரர் அம்பாதி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி மட்டுமே. இதன் மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரராக அறியப்படுகிறார்.



    இறுதிப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி செலவளித்துள்ள தொகை ரூ.12 ஆயிரம். பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

    15 கோடி ஊதியம் பெற்ற ரோகித் சர்மா எடுத்துள்ள புள்ளி 1252, அவரின் ஒரு புள்ளிக்கு செலவளிக்கப்பட்ட தொகை 1,19,808 ரூபாய். இதேபோல, பந்துவீச்சாளர்களில் டெல்லி அணியில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சால் படேல் 2 கோடிக்கு எடுக்கப்பட்டு 830 புள்ளிகள் எடுத்துள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 860 ரூபாயை அணி செலவளித்துள்ளது. 

    இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய எல்லா வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
    ×